ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மலேசியாவில் உள்ள ரஜினியின் நண்பர் டத்தோ மாலிக். இவர்தான் கபாலி படத்தின் மலேசிய விநியோகஸ்தர். இவர் கபாலி படத்தின் நினைவாக ரஜினியின் ஒண்ணேகால் அடி உயர சிலை ஒன்றை உருவாக்கி உள்ளார். ஜப்பான் நாட்டில் உருவான இந்த சிலையின் சிறப்பு என்னவென்றால் 36 விதமான ரஜினி ஸ்டைலாக இதனை மாற்றி வைத்துக் கொள்ளலாம்.
கபாலி 2016ம் ஆண்டு வெளியாகி இருப்பதால் மொத்தம் 2016 சிலைகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. கபாலி படத்தில் ரஜினி பயன்படுத்திய கைகாப்பு, துப்பாக்கி, கோட் ஆகியவை அப்படியே தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் சிலையை பெற்றுக் கொண்டு டத்தோ மாலிக்கை வாழ்த்தினார் ரஜினி. மாலிக்கின் ஜவுளி கடையை ரஜனி மலேசியாவில் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.