ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
காக்க காக்க படத்தில் சூர்யாவுடன் ஜீவனை மோத விட்டார் கெளதம்மேனன். அதன்பிறகு அவர் ஹீரோவாகி விட்டார். அதேபோல் அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அருண்விஜய்யை வில்லனாக்கினார். அதுவரை அடங்கியிருந்த அவரது மார்க்கெட் அந்த படத்திற்கு பிறகு ஆரவாரமாகி விட்டது. ஆனால் இப்படி இதுவரை தனது படங்களில் மற்ற நடிகர்களை வில்லனாக்கி வந்த கெளதம்மேனன், தற்போது தனுஷை வைத்து தான் இயக்கி வரும் என்னை நோக்கி பாயும் தோட்டாவில் ராணா வில்லனாக நடித்தபோதும் தானும் ஒரு வில்ல னாக நடித்து வருகிறார்.
இதற்கு முன்பு தான் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் மற்றும் கண்ணா லட்டு தின்ன ஆசையா என பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ள கெளதம்மேனன், இந்த படத்தில் இதுவரை நடித்ததை விட பெரிய வேடத்தில் நடிக்கிறார். கிட்டத்தட்ட ராணாவுக்கு இணையான இன்னொரு வில்லன் வேடம் என்றும் அப்படக்குழுவினர் தகவல் தருகின்றனர்.