ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கமலின் அண்ணன் சாருஹாசன் தென்னிந்திய மொழிப்படங்கள் மட்டுமின்றி இந்தி படங்களில் நடித்து வருகிறார். முக்கியமாக அதிக படங்கள் என்றில்லாமல் செலக்டீவான வேடங்களில் மட்டுமே அவர் நடித்துள்ளார். அந்த வகையில், த பெரனகதே -என்ற கன்னட படத்திற்காக தேசிய மற்றும் மாநில அரசு விருது களை பெற்றுள்ள சாருஹாசன், குபி மாட்டு இயலா -என்ற கன்னட படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகருக்கான கர்நாடக அரசின் விருது பெற்றிருக்கிறார்.
மேலும், தற்போது 85 வயதாகி விட்டபோதும், அவ்வப்போது சினிமாவில் நடித்து வரும் அவர், தற்போது விஜய்ஸ்ரீ என்பவர் இயக்கும் ஒரு தமிழ்ப்படத்தில் சென்னை தாதாவாக நடிக்கிறார். தாதா வேடம் என்பதால் தனது நிஜ தோற்றமான தாடி கெட்டப்பிலேயே நடிக்கும் சாருஹாசனுக்கு மேக்கப்பே கிடையாதாம். அதேசமயம், கதைப்படி தாதா என்றபோதும், ஏழை மக்களை காப்பாற்றும் முக்கியத்துவம் வாய்ந்த மனிதராக அவரது கேரக்டர் அமைந்துள்ளதாம்.