ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
விமல் நடித்த 'மஞ்சபை' படத்தை இயக்கியவர் ராகவன். இவரது இயக்கத்தில் 'கடம்பன்' என்ற படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. இந்தப் படத்தை, அடுத்து மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் 'கிரேட் ஃபாதர்' என்ற மலையாளப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் ஆர்யா. கேரளத்தைச் சேர்ந்த மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட ஆர்யா, ஏற்கெனவே 'உருமி', 'டபுள் பேரல்' ஆகிய மலையாள படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். அந்தப் படங்களைத் தொடர்ந்து ஆர்யா நடிக்கும் மலையாளப்படம்தான் 'கிரேட் ஃபாதர்'.
ஃபேமிலி டிராமாவாக உருவாக இருக்கும் இந்தப் படத்தில் படம் முழுக்க வரும் பவர்ஃபுல் வில்லனாக நடிக்கிறாராம். அறிமுக இயக்குனர் ஹனீஃப் அடேனி இயக்கும் இந்தப்படத்தில் மற்றுமொரு கோலிவுட் நட்சத்திரமும் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நடிக்கிறார். அவர் நடிகை சினேகா! ஏற்கெனவே இரண்டு மலையாள படங்களில் மம்முட்டியுடன் இணைந்து நடித்துள்ளார். அந்தப் படங்களில் சினேகாவின் நடிப்பு பாராட்டப்பட்டது.
அதன்அடிப்படையில்தான் 'கிரேட் ஃபாதர்' படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாகி இருக்கிறார்! திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த சினேகா இப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் என்ட்ரியாகிறர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது! இப்படம் வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ந்து அவர் படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். சினேகாவிற்கு இந்த ரீ-என்ட்ரி கை கொடுக்குமா...? பொறுத்திருந்து பார்ப்போம்!