விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்களில் முக்கியமானது பாட்ஷா. தனக்கு பிடித்த படங்களில் பாட்ஷாவிற்கு எப்போதுமே தனி இடம் கொடுத்துள்ளார் ரஜினி. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரஜினி, நக்மா, ரகுவரன், விஜயகுமார், யுவராணி, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான இப்படம் சூப்பர், டூப்பர் ஹிட்டானது. சத்யா மூவி மேக்கர்ஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார். தேவா இசையமைத்திருந்தார்.
ரஜினி, மும்பை தாதாவாகவும், ஆட்டோ டிரைவராகவும் இரண்டு வித்தியாசமான கேரக்டரில் அருமையாக நடித்திருந்தார். அதிலும் மும்பை டான் கேரக்டர் பற்றி சொல்லவே வேண்டாம். ரஜினியால் இப்படியெல்லாம் கூட நடிக்க முடியுமா என்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய கேரக்டர் அது. அதிலும் அந்தப்படத்தில் அவர் சொல்லும் ‛‛ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி டயலாக், ரஜினியின் எவர்கிரீன் டயலாக்குகளில் முக்கியமானது. பாட்ஷா படத்தில் ரஜினிக்கு எந்தளவுக்கு ஒரு பெயர் கிடைத்ததோ, அதேப்போன்று இப்படத்தில் பேசப்பட்ட மற்றுமொரு நடிகர் ரகுவரன். ஆண்டனி, மார்க் ஆண்டனி என்று பேசியபடி இவர் பண்ணிய வில்லத்தனம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
சமீபகாலமாக சிவாஜி, எம்.ஜி.ஆர்., நடித்த பழைய படங்கள் டிஜிட்டலில் மாற்றப்பட்டு மீண்டும் ரீ-லீசாகி வரும் நிலையில், ரஜினி நடித்த பாட்ஷா படமும் டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுப்பற்றி தயாரிப்பாளர் டிஜி தியாகராஜன் கூறுகையில், ‛‛பாட்ஷா படத்தை டிஜிட்டலில் வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அதற்கான பணிகள் துவங்கி உள்ளது என்று கூறியுள்ளார்.
பாட்ஷா படம் டிஜிட்டலில் வெளியிட இருப்பது ரஜினி ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.