விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
20 -20 ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டினைப் போன்று தமிழகத்தின் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி விரைவில் நடைபெற உள்ளது. இந்த போட்டி களில் தேசிய அளவில் விளையாடிய பல வீரர்களும் கலந்து கொள்கிறார்கள். மாவட்ட ரீதியிலான விளையாட்டு என்றாலும் இதையும் பெரிய அளவில் குறிப்பாக விளையாட்டு ரசிகர்களின் ரசனைக்கு தீனி போடும் வகையில் இந்த போட்டி களையும் நடத்தப்போகிறார்களாம்.
அந்த வகையில், மதுரை சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியினர் தங்களது அணிக்கான பிரமோஷன் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த பாடலை நடிகர் சிம்பு பாடியிருக்கிறார். இந்த பாடலின் ஆடியோவை கிரிக்கெட் வீரர் சேவாக் சென்னை வந்து வெளியிட்டார். அதையடுத்து இப்போது அந்த பாடலின் வீடி யோ வடிவம் ஒன்று தயாராகியுள்ளது. அந்த அணியில் இடம்பெற்றுள்ள வீரர் கள் அனைவரும் அதில் பங்கேற்றுள்ளனர். இந்த வீடியோ ஆல்பத்தை இன்று இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரைனா இணையதளத்தில் வெளியிடு கிறார்.