ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
2006ம் ஆண்டு வெளிவந்த படம் திருட்டுப்பயலே. சுசி கணேசன் இயக்கி இருந்தார். ஜீவன், சோனியாக அகர்வால், அப்பாஸ், மாளவிகா நடித்திருந்தனர். பரத்வாஜ் இசை அமைத்திருந்தார். ரவி ஷங்கர் ஒளிப்பதிவு செய்திருந்தார். நிதிநிறுவனமான கல்பாத்தி நிறுவனம் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தயாரித்த முதல் படம். பெரிய அளவில் வெற்றி பெற்றது. பெரிய இடத்து பெண்களை மிரட்டி அதன் மூலம் சொகுசு வாழ்க்கை வாழும் ஒரு திருட்டுப்பயலின் கதை.
இரண்டாம் பாகம் : தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. முதல் பாகத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இது அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டது. சுசிகணேசன் இயக்கும் இந்தப் படத்தில் பாபிசிம்ஹா தான் திருட்டுபயலாக நடிக்கிறார், அவருக்கும் வில்லனாக பிரசன்னா நடிக்கிறார். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. முதல் பாகத்தின் பெரும் பகுதியை ஆஸ்திரேலியாவில் படம் பிடித்ததை போன்று இரண்டாம் பாகத்தையும் ஒரு வெளிநாட்டில் படமாக்க இருக்கிறார்கள்.
மீண்டும் சுசி.கணேசன் : பத்திரிக்கையாளராக வாழ்க்கையை தொடங்கி சங்கரிடம் உதவியாளராக இருந்து பைவ் ஸ்டார் படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் சுசி.கணேசன். அடுத்து விரும்புகிறேன், திருட்டுப்பயலே, கந்தசாமிபடங்களை இயக்கினார். அனைத்து படங்களுமே வெற்றிப் படங்கள்தான். கந்தசாமி படத்தை இந்தியில் எடுக்க போகிறேன் என்று கிளம்பிப் போனவர் அங்கேயே செட்டிலாவிட்டார். சார்ட்கட் ரெமோ என்ற படத்தை தொடங்கினார். ஆனால் அவரது இந்தி முயற்சிகள் வெற்றி பெறவில்லை. 5 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். அவருக்கு திருட்டுப்பயலே படம் கொடுத்த நிறுவனமே மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்கிறது. அவர் அறிமுகப்படுத்திய பிரசன்னா மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறார்.