ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஜீவா நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஜீவா நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் ‛திருநாள்'. இப்படத்தை தொடர்ந்து, ஜீவா, காஜல் அகர்வாலுடன் கவலை வேண்டாம் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர ‛சங்கிலி புங்கிலி கதவதொற' படத்திலும் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களை தொடர்ந்து எம்ஜிஆரின் பாடல் வரிகளான ‛நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படத்தில் நடிக்கிறார். எம்ஜே அருண் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் திருநாள் படத்தின் ரிலீஸின் போது வெளியானது.
இந்தப்படத்தில் ஜீவா ஜோடியாக முன்னணி ஹீரோயின் ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் அந்த முயற்சி தோல்வி அடையவே இப்போது லட்சுமி மேனனை நடிக்க வைக்க எண்ணியுள்ளார்கள். இதுதொடர்பாக அவரிடம் பேசி வருவதாகவும், ஆனால் இன்னும் சம்மதம் சொல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.