சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
ஜெய், யாமி கவுதம் நடித்துள்ள படம் 'தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்'. இவர்களுடன் நாசர், தம்பி ராமய்யா, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பாடகர் கார்த்தி இசை அமைத்துள்ளார். அறிமுக இயக்குனர் பிரேம்சாய் இயக்கி உள்ளார். இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் தயாரித்துள்ளார்.
கவுதம் மேனன் நல்ல கதைகள் கிடைத்தால் அதை தயாரித்து விடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அப்படி அவர் தயாரித்த படம்தான் 'தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்' கூரியர் பாயாக எளிய வாழ்க்கை வாழும் ஜெய்க்கு அந்த கூரியர் மூலம் ஒரு வில்லங்கமும் வந்து சேரும். அதிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதை த்ரில்லர் பாணியில் சொல்லும் கதை. இந்தப் படத்தில் நடித்த யாமி கவுதம் இந்தி பக்கம் சென்று அங்கு பிரபலமான நடிகையாகிவிட்டார்.
இந்த படம் ரெடியாகி 2 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. தயாரிப்பாளர் கவுதம் மேனனுக்கு ஏற்பட்ட சில பொருளாதார சிக்கல்கள் காரணமாக வெளிவராமல் இருந்தது. இப்போது அந்த சிக்கல்களை களைந்து படம் வருகிற ஆகஸ்ட் 5ந் தேதி வெளிவருவதாக அறிவித்திருக்கிறார்கள். தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஜெய்க்கு இந்தப் படம் ஒரு வெற்றியை கொடுக்குமா?, பாலிவுட்டு சென்று விட்ட யாமி கவுதமை கோலிவுட்டுக்கு திரும்ப அழைத்து வருமா தனியார் அஞ்சல் என்பது 5ந் தேதி தெரியும்.