ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'உன்னை போல் ஒருவன்', 'பயணம்', 'இது கதிர்வேலன் காதல்' உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடத்திலும் போலீஸ் அதிகாரி வேடத்திலும் நடித்தவர் பரத் ரெட்டி. பிரபல இருதயநோய் நிபுணரான இவர் ஐதராபாத் அப்பல்லோ மருத்துவனையில் அதிகாரியாகவும் இருக்கிறார். நடிப்பு ஆர்வத்தால் அவ்வப்போது நடிக்கவும் செய்வார்.
தற்போது பரத் ரெட்டி 'பேயுடன் ஒரு பயணம்' என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக விசாகா சிங், மீனாட்சி தீக்ஷித் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர ஊர்வசி, ஜான்விஜய், யோகிபாபு முனீஷ்காந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரசாத் இசை அமைக்கிறார், ஆண்ட்ரூ ஒளிப்பதிவு செய்கிறார். மணி சர்மா இயக்குகிறார்.
படத்தில் நடிப்பது பற்றி பரத் ரெட்டி கூறியதாவது: இதுவரை 20 படங்கள் வரை நடித்திருக்கிறேன், 'பேயுடன் ஒரு பயணம்' படத்தில் முதன் முறையாக ஹீரோவாக நடிக்கிறேன். இது பேய் படம் தான். ஆனால் நிஜமான, திகிலான படம். டாக்டர் என்ற வகையில் மனிதன் உயிர்போகும் தருணங்களில் நான் கவனித்திருக்கிறேன். அப்படி பிரிந்த உயிர்கள் இரவில் என்னோடு பேசுவதாக உணர்ந்திருக்கிறேன். நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாக சில நேரங்களில் கற்பனை செய்து கொள்வேன். அந்த சம்பவம் அடுத்து சில நாட்களில் நடந்து விடும். இதுவும் எனது அனுபவம்தான். இதை மையமாக வைத்துதான் இந்தப் படம் உருவாகி வருகிறது, காமெடி எதுவும் இல்லாமல் சீரியசான பேய் படமாக, பயமுறுத்தும் படமாக இருக்கும் என்கிறார் பரத் ரெட்டி.