ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த 'கபாலி' படம் ரிலீசாவதற்கு முன்னும், ரிலீஸான பின்னும் படைத்துவரும் சாதனைகளுக்கு என்றே தனி புத்தகம் போடலாம். அந்த அளவுக்கு பக்கத்து மாநிலம், பக்கத்து நாடு என எல்லா ஏரியாக்களிலும் விதவிதமான வகைகளில் சாதனைகளை படித்து வருகிறது. அந்தவகையில் கேரளாவில் மட்டும் வெள்ளிக்கிழமை 306 தியேட்டர்களில் ரிலீஸான கபாலி, அதற்கு முன்பு 220 தியேட்டர்களில் ரிலீஸான விக்ரம் நடித்த ஐ' பட ரிலீஸ் சாதனையை முறியடித்தது. இப்போது எதிர்பார்க்கப்பட்ட மாதிரியே வசூலிலும் விக்ரமின் 'ஐ' பட சாதனையை முறியடித்துள்ளது 'கபாலி'.
கேரளாவில் மலையாள சினிமாக்களை பொறுத்தவரை சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் படம் தான் இதுநாள்வரை முதல்நாள் வசூலில் முன்னணியில் இருக்கிறது.. ஆனால் அந்த சாதனையை விஜய், விக்ரம் போன்றவர்களின் தமிழ்ப்படங்கள் எளிதாக முறியடித்து வந்தன.. கடந்த வருடம் விக்ரம் நடித்த 'ஐ' படம் முதல் நாள் வசூலாக 3.19 கோடி ரூபாய் வசூலித்து இதுநாள் வரை முதலிடத்தை பிடித்திருந்தது. இப்போது கபாலியின் முதல் நாள் வசூல் அதைவிட ஒரு கோடி ரூபாய் அதிகரித்து அதாவது 4.2 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இனி வரும் நாட்களில் 'கபாலி'யின் சாதனையை முறியடிக்க, இன்னொரு ரஜினி படம் வந்தால் தான் ஆச்சு என கேரளா விநியோகஸ்தர்களே பேசிக்கொள்கிறார்கள்.