ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
லொள்ளு சபா ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் தில்லுக்கு துட்டு.தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்கள் வெற்றியடையவில்லை.
அப்படங்களின் வசூல் சாதனையை முறியடித்து தில்லுக்கு துட்டு படம் முதல் நாளில் 3 கோடிக்கு அதிகமாக வசூல் செய்திருக்கிறது.சென்னைக்கு புறநகரில்ல் உள்ள மாயாஜால் திரையரங்கில் 100 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியதாக அறிவித்திருக்கிறார்கள்.
தில்லுக்கு துட்டு படத்துக்கு கமர்ஷியலாக வரவேற்பு கிடைத்திருப்பதால், தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமைக்கு போட்டி ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.பாலிவுட் மற்றும் டோலிவுட்டைச் சேர்ந்த பலரும் ரீமேக் ரைட்ஸ் கேட்டு தேனாண்டாள் நிறுவனத்தை அணுகி இருக்கிறார்கள்.தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வரும்நிலையில், யாருக்கு ரீமேக் ரைட்ஸ் கிடைக்கப்போகிறதோ?