ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'10 எண்றதுக்குள்ள' படத்தைத் தொடர்ந்து தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் 'இருமுகன்' படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். நயன்தாரா, நித்யாமேனன் கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு இருமுகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியிடப்பட்டது. அதன் பிறகு இருமுகன் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளிவரவில்லை. இந்நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான 'ஹெலனா...' என்ற பாடலின் சிங்கிள் டிராக் மற்றும் டீஸரை வரும் 16 ஆம் தேதி மாலை 7 மணிக்கு யு டியூபில் வெளியிடவிருக்கிறார்கள்.
விக்ரமுடன் நயன்தாரா முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் இப்படத்தில் ஹெலனா பாடல் காட்சி படு நெருக்கமாக நடித்திருக்கிறார்களாம். எனவே தான் விக்ரம் நயன்தாரா இருவரும் பங்குபெறும் அந்த பாடல் காட்சியை முதலில் வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள். படு கவர்ச்சியான உடையில் நயன்தாரா தோன்றி நடித்திருப்பது மட்டுமல்ல, ரொமான்ஸ் காட்சிகளில் விக்னேஷ்சிவன் வெறுத்துப்போகுமளவுக்கு நெருக்கம் காட்டி இருக்கிறார்களாம்.
இந்த தகவல் விக்ரம் தரப்பிலிருந்து கசியவிடப்பட்டதால் ஹெலனா பாடல் காட்சி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு விக்ரம் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. 'புலி' ஷிபு தமீன்ஸ் தயாரிக்கும், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஆரா சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.