ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தினமலர் சார்பில் ரஜினியின் ‛கபாலி படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு இணையதளத்தை ‛கபாலி படத்தின் தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான கலைப்புலி எஸ்.தாணு, தினமலர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து துவக்கி வைத்தார்.
ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள படம் ‛கபாலி. பாட்ஷா படத்திற்கு பிறகு மீண்டுமொரு கேங்ஸ்டர் கதையில் நடித்திருக்கிறார் ரஜினி. கபாலி படத்தின் கதையை மலேசிய தமிழர்களை மையமாக வைத்து இயக்கியிருக்கிறார் பா.ரஞ்சித். படத்தின் அனேக காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டன. ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தினேஷ், கலையரசன், தன்ஷிகா, கிஷோர், நாசர், மைம் கோபி உள்ளிட்டவர்களுடன் ஹாலிவுட் நடிகர் வின்ஸ்டனும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். ரஜினி முழுக்க, முழுக்க இளம் கலைஞர்களுடன் பணியாற்றி இருக்கிறார்.
ரஜினியின் கபாலி படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக ‛கபாலி சிறப்பு இணையதளம் ஒன்று தினமலர் இணையதளத்தில் பிரத்யேமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை கபாலி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இன்று(ஜூன் 25ம் தேதி) துவக்கி வைத்தார். மேலும் இன்று தாணுவிற்கு பிறந்தநாள் என்பதால், தன்னுடைய பிறந்தநாளில் இதை துவக்கி வைத்தது மகிழ்ச்சி என்று கூறினார்.
இந்த இணையதளத்தில், ‛கபாலி சம்பந்தப்பட்ட லேட்டஸ்ட் செய்திகள், பாடல்கள், டீசர், படக்குழுவினரின் பிரத்யே பேட்டி, போட்டோ கேலரி உள்ளிட்ட அத்தனை விஷயங்களும் இடம்பெற்றுள்ளது.
கபாலி சிறப்பு இணையதளம் காண இங்கே கிளிக் செய்யவும்: http://cinema.dinamalar.com/kabali/index.php