ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அனிருத்தின் நெருங்கிய உறவினரான ஹரிஷ்கேஸ் அறிமுகமாகும் 'ரம்' படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. இதில் சஞ்சிதா ஷெட்டி ஹீரோயின். நரேன், அர்ஜுன் சிதம்பரம், அம்ஜத்கான் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார், இதன் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடந்து வந்தது. தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. டி.விஜயராகவேந்திரா தயாரிக்கிறார். சாய் பரத் இயக்கி உள்ளார்.
இதன் படப்பிடிப்பு நிறைவு விழாவை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்த படக்குழுவினர் அன்றைய தினம் வெளியான கபாலி படத்தின் டீசரை படப்பிடிப்பில் பெரிய ஸ்கரீன் கட்டி அதில் திரையிட்டு கொண்டாடியிருக்கிறார்கள். திகில் படமான 'ரம்' கதை பெரும்பாலும் இரவிலேயே நடப்பதால் படப்பிடிப்பு 60 இரவுகள் தொடர்ந்து நடந்துள்ளது. அதை வெற்றிகரகமாக முடித்த அனைவருக்கும் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா நன்றி தெரிவித்தார்.