மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
இளைஞர், வயதானவர், பெண் என மூன்று வித்தியாசமான வேடங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ரெமோ' படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறதாம்.
பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் ரெமோ படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளனவாம். அனிருத்திடமிருந்து பாடல் வராததினால் பாடல்காட்சி படமாக்கப்படாமல் உள்ளதாம். இரண்டு பாடல்காட்சிகள் தவிர, சின்னச்சின்ன பேட்ச் ஒர்க்குகளும் இன்னும் மீதமிருக்கின்றனவாம். இன்னொருபுறம் ரெமோ படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் வேலைகளும் இன்னும் முடியவில்லை என்று கூறப்படுகிறது.
அனிருத் பாடல்களைக் கொடுத்து, அவற்றை படமாக்கி, பேட்ச் வொர்க்குகளை முடித்து, கிராபிக்ஸ் வேலை முடிவடைந்து, இத்தனையும் முடிய எப்படியும் இரண்டு மாதங்களாகும். எனவே, ரெமோ படத்தின் ரிலீஸ் செப்டம்பர் மாதம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பரில் விநாயகர் சதுர்த்தி வருவதால் அன்றைய தினத்தில் ரெமோ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் 'ரெமோ' படத்தின் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன்.