ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களைத் தொடர்ந்து தற்போது சந்தானம் கதாநாயகனாக நடித்து வரும் படம் - 'தில்லுக்கு துட்டு'. புதுமுகம் ஷனன்யா அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம்தயாரிக்கிறது. தொடர்ந்து ஹாரர் படங்களை வாங்கி வெளியிட்டு வரும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் இப்படத்தைத் தயாரித்ததற்கும் காரணம் உண்டு. இதுவும் பேய்ப்படம்தான். ஆனால் பயமுறுத்தும் பேய்ப்படம் இல்லை, ஹாரர் காமெடி என்கிற சிரிக்க வைக்கும் பேய்ப்படம். ஆனாலும், புதிய கெட்அப்பில் டான்ஸ், ஃபைட் என அனைத்து ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்திருக்கிறாராம் சந்தானம்.
'லொள்ளு சபா' புகழ் ராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். 'பீட்சா 2 வில்லா' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த தீபக்குமார் பதி இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். பரபரப்பாக வளர்ந்து வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் நேற்றிரவு (அதிகாலைன்னு சொல்லலாமா?) சுமார் 2 மணி அளவில் வெளியிடப்பட்டது.
அஜித் பட டீசரைப்போல் நடு ராத்திரியில் வெளியிட்டால் ரசிகர்கள் மத்தியில் தில்லுக்கு துட்டு படத்தின் டீஸருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டு லட்சத்துக்கும் குறைவான பேர் தான் டீசரை பார்த்துள்ளனர்.