சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். இவரும் தந்தை பாதையில் பின்னணி பாடகராகவே சினிமாவில் அறிமுகமானார். தென்னிந்திய மொழிப்படங்களில் பிசியாக பாடி வருகிறார். இந்நிலையில், 2010-ல் அவன் என்றொரு மலையாள படத்தில் ஒரு கேரக்டரில் நடித்த விஜய் யேசுதாஸ், 2015ல் தமிழில் தனுஷ் நடித்த மாரி படத்தில் வில்லனாக ஒரு நெகடீவ் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு சில நெகடீவ் வேடங்கள் சென்றபோது அவர் ஏற்கவில்லை.
ஆனால் இப்போது மணிரத்னத்தின் உதவியாளர் ஒருவர் இயக்கும் படைவீரன் என்ற படத்தில் ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் யேசுதாஸ். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சில முன்னணி நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வருகின்றனர். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வும் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், ஏற்கனவே சண்டை பயிற்சி எடுத்துள்ள விஜய் யேசுதாஸ், இந்த படத்தில் டூயட் பாடல் இருப்பதால் தற்போது நடன பயிற்சி எடுத்து வருகிறாராம்.