ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
இசை படத்திற்கு பிறகு தமிழில் முழுநேர நடிகராகி விட்டார் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் தெலுங்கில் ஏற்கனவே தான் இயக்கிய குஷி, புலி படங்களில் நடித்த பவன் கல்யாணை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க தயாராகிக்கொண்டி ருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், அப்படத்தின் நாயகி யார் என்பதை அறிவிக்கவில்லை. ஆனால் ஸ்ருதிஹாசன் கமிட்டாகியிருப்பது இப்போது உறுதியாகியிருக்கிறது. ஏற்கனவே பவன்கல்யாணுடன் கப் பார்சிங் ஹிட் படத்தில் நடித்தவர் ஸ்ருதிஹாசன் என்பதால் இது சாத்தியமாகியுள்ளதாம்.
மேலும், தமிழில் அஜீத் நடித்து வெளியான வீரம் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் தமிழில் தமன்னா நடித்த ரோலில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். அதே சமயம், தமிழில் தமன்னா நடித்தது போன்று புடவை கெட்டப்பில் ஸ்ருதி நடித்த போதும், பாடல் காட்சிகளில் தெலுங்கு ரசிகர்களின் ரசனையை மனதில் கொண்டு கவர்ச்சி உடையணிந்து நடிக்கிறாராம் ஸ்ருதிஹாசன். அது மட்டுமின்றி, தெலுங்கிற்காக காட்சிகளில் சில திருத்தங்களை செய்திருக்கிறாராம் எஸ்.ஜே.சூர்யா.