ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
எய்ட்ஸ் விழிப்புணர்வு, மற்றும் மலைவாழ் மக்கள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை மையப்படுத்தி 80க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியவர் ரிவான். இவர் தற்போது மலைவாழ் மக்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து திட்டிவாசல் என்ற படத்தை உருவாக்கி உள்ளார். மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் ஒரு ஜோடிகள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். மலையிலிருந்து இறங்கி நாட்டுக்கு வரும் அவர்கள் மீது ஒரு பொய்யான வழக்கை போட்டு அவர்கள் வாழ்க்கையை சிதைக்கிறது போலீஸ். இதை எதிர்த்து அந்த மக்கள் எப்படி போராடி ஜெயிக்கிறார்கள் என்பதுதான் கதை.
இதில் மாஸ்டர் மகேந்திரன், புதுமுகம் தனு ஷெட்டி அந்த இளம் ஜோடிகளாக நடிக்கிறார்கள். மலை மக்களை திரட்டி போராடும் கிராமத்து தலைவராக நாசர் நடித்துள்ளார். அஜய் ரத்னம் மலையில் மறைந்து வாழும் நக்சலைட்டாக நடித்துள்ளார்.
இந்த கதையின் வழியே மலைவாழ் மக்களின் வாழ்க்கை பிரச்னை. மலையில் வாழும் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் போன்றவை இடம்பெறுகிறது. கோத்தகிரி, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா எல்லைகள் சந்திக்கும் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் மற்றும் சதீஷ் சகோதரர்கள் இசை அமைத்துள்ளனர். படம் விரைவில் வெளிவர இருக்கிறது.