ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழக சட்டசபை தேர்தல் மே 16-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகமெங்கும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. சில கட்சிகளுக்காக சினிமா நடிகர்களும் பிரசாரம் செய்து ஓட்டு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக நடிகர் விஜய், தனது ரசிகர்களிடத்தில் திமுக.,வுக்கு ஆதரவாக செயல்படுமாறு கூறியதாக செய்தி வந்தது. ஆனால் அந்த செய்தி உண்மையில்லை என விஜய் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விஜய் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மக்கள் இயக்கம் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை, அப்படி வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது. தேர்தலில் எந்தகட்சிக்கும் மக்கள் இயக்கம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு தெரிவிக்கவில்லை. நடைபெற இருக்கின்றன தேர்தலில் எனது ரசிகர்கள் தங்களது விருப்பம் போல் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப்போடலாம். அதேசமயம் இந்த தேர்தலில் மக்கள் இயக்கத்தின் பெயரையோ அல்லது கொடியையோ கண்டிப்பாக பயன்படுத்த கூடாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.