ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சந்தானம் காமெடி ட்ராக்கில் இருந்து விலகி ஹீரோ ட்ராக்கில் பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது மீண்டும் காமெடியனாக களமிறங்கியுள்ளார் வடிவேலு. அதேபோல் சூரி, சிங்கமுத்து, சிங்கம்புலி, கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன், யோகிபாபு, ஆடுகளம் முருகதாஸ் என பல காமெடியன் களும் களத்தில் உள்ளனர். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்துக்குப் பிறகு பேசப்படும் காமெடியனான சதீஷ் தற்போது சத்தமில்லாமல் மெகா நடிகர்களின் படங்களை கைப்பற்றி முன்வரிசைக்கு முன்னேறிக்கொண்டி ருக்கிறார்.
குறிப்பாக, சிவகார்த்திகேயனின் மெரினா, எதிர்நீச்சல், மான்கராத்தே போன்ற படங்களில் நடித்து வந்த சதீஷ், இப்போது அவரது ரெமோ படத்திலும் முக்கியமாக காமெடியனாக நடித்துள்ளார். அதையடுத்து, கத்திக்கு பிறகு விஜய்யின் 60வது படத்திலும் முதன்மை காமெடியனாக நடிக்கும் சதீஷ், விஜயசேதுபதியின் ரெக்க படத்திலும் காமெடி வேடத்தில் நடிக்கிறார். ஆக, இப்போது மூன்று முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய காமெடியனாக நடித்து வருகிறார் சதீஷ்.