ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் திரைப்படத்தை தியேட்டரில் வெளியாகும் அன்றே ஆன்லைனிலும் வெளியிட திட்டமிட்டார். அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பவே அந்த திட்டத்தை கைவிட்டார். இனி வரும் காலங்களில் படங்கள் ஆன்லைனில் வெளியிடப்படலாம். அல்லது ஆன்லைனில் வெளியிடுவதற்கென்றே படங்கள் தயாராகலாம்.
அந்த திட்டத்தை பீட்சா, சூதுகவ்வும், முண்டாசுபட்டி படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் செய்ய இருக்கிறது. சிறந்த கதையம்சமுள்ள திரையரங்குகளில் வெளியிடப்படாத படங்களை வாங்கி ஆன்லைனில் வெளியிட இருக்கிறது. இந்த திட்டத்தின் முதல் படமாக இஃக்லு என்ற படத்தை அடுத்த மாதம் வெளியிட இருக்கிறார்கள்.
அம்ஜத், லட்சுமிபிரியா நடித்துள்ள இந்த படத்தை பரத்மோகன் இயக்கி உள்ளார், விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார், குகன் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீ ஸ்டூடியோ மற்றும் ஸ்ரீ அண்ட் ஸ்ரீ புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. கணவன் மனைவிக்குள் உருவாகும் ஈகோவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள த்ரில்லர் கதை. இந்தப் படத்தில் நடித்துள்ள அம்ஜத், லட்சுமிப்ரியா ஜோடிதான் சமீபத்தில் வெளிவந்த களம் படத்திலும் ஜோடியாக நடித்திருந்தனர்.