இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் |
சினிமாவில் ஜெயிக்க தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர்களில் ஒருவர் அசோக். முருகா படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு படிச்சிருக்கு, கோழி கூவுது, உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது புத்தன் யேசு காந்தி படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் ஹீரோவாக ஜெயிக்க போராடும் அசோக், 'ஸ்கெட்ச்' என்ற குறும்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
சென்னை ரோடுகளில் எடுக்கப்பட்ட ஒரு த்ரில்லர் குறும்படம். நான்கு பேர் சேர்ந்து "ஸ்கெட்ச்" போட்டு 24 மணி நேரத்தில் ஹீரோவை தூக்க முயற்சிகிறார்கள். ஏன், எதற்காக ஹீரோவை தூக்க முயற்சிகிறார்கள் என்பது தான் சஸ்பென்ஸ். இவர்கள் சூழ்ச்சியை ஹீரோ கண்டுபிடித்து தப்பித்தாரா இல்லையா என்பது தான் கதை. 22 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படத்தை எழுதி-இயக்கி இருக்கிறார் எம்.சாய். இது இவருக்கு முதல் குறும்படம். இந்த குறும்படத்தில் அசோக் தவிர "லொள்ளு சபா" புகழ் சுவாமிநாதன், "சுந்தரபாண்டியன்", "மதயானை கூட்டம்", "சேதுபதி" புகழ் காசி மாயன் ஆகியோர் நடித்துள்ளனர்.