ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
டார்லிங், திரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகிய படங்களே ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் வெளியாகியிருக்கும் நிலையில், அவருக்கென்று தற்போது ஒரு பெரிய கமர்சியல் வட்டம் உருவாகி விட்டது. அதனால் இதையடுத்து அவர் நடிப்பில் வெளியாகயிருக்கும் புருஸ்லீ படத்துக்கு நல்லதொரு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.
மேலும், புருஸ்லீ படத்தின் டைட்டீலை பார்த்து ஆக்சன் படமாக இருக்கும் என்று நினைத்தால், இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷின் பெயர்தான் புருஸ்லீ. மற்றபடி அவர் செய்யுற வேலையெல்லாம் நகைச்சுவையாகத்தான் இருக்கும் என்கிறார்கள். ஆக, முதன்முறையாக காமெடி நாயகனாக நான் கடவுள் ராஜேந்திரன், பாலசரவணன் ஆகியோருடன் சேர்ந்து பெரிய அளவில் ஸ்கோர் பண்ணியிருக்கிறாராம் ஜி.வி.பிரகாஷ்குமார்.