ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாய்ஸ் படத்தில் ஐந்து ஹீரோக்களில் குண்டு பையனாக நடித்தவர் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான இவர், அதன்பின்னர் ஸ்லிம்மாகி, 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து மாசிலாமணி, கந்தக்கோட்டை, நான் ராஜாவாகப் போகிறேன், வல்லினம், தமிழுக்கு எண் 1 அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் இதில் எந்தபடமும் நகுலுக்கு பெரிய வெற்றியை தரவில்லை. தமிழுக்கு எண் 1 அழுத்தவும் மட்டும் வெற்றி படமாக அமைந்தது. நகுலும் முன்னணி நடிகராக வர துடித்து கொண்டிருக்கிறார்.
இதனிடையே சமீபத்தில் இல்லற வாழ்வில் இணைந்த நகுல், அடுத்தப்படியாக மலையாள இயக்குநர் கோபாலன் மனோஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் நகுல் ஜோடியாக 'வி ஆர் பேமிலி, அராக்ஷ்ன், காயல் ஒன்ஸ் அகைன்' போன்ற படங்களில் நடித்த ஆஞ்சல் முஞ்சால் நடிக்க இருக்கிறார். ஆஞ்சல் நடிக்கும் முதல் தமிழ்படம் இதுவாகும். இதன்மூலம் பாலிவுட்டில் மட்டுமே நடித்து வந்த ஆஞ்சல் இப்போது கோலிவுட்டிலும் களம் இறங்க உள்ளார். விரைவில் இப்படம் பற்றிய மற்ற விபரங்கள் வெளியாக இருக்கிறது.
தற்போது நகுல், 'நாரதன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.