ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அனேகன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த அமைரா தஸ்தூர் அடிப்படையில் இந்தி நடிகை. இவர் தற்போது இந்தியா சீனா கூட்டு தயாரிப்பில் உருவாகி வரும் குங்பூ யோகா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜாக்கிசான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அமைரா. தற்போது இதன் படப்பிடிப்புகள் ஐஸ்லாந்தில் கடும் பனி பிரதேசத்தில் நடந்து வருகிறது. சீன இயக்குனர் ஸடேன்லி டோங் இயக்கி வருகிறார்.
படத்தில் நடிப்பதற்கு முன் மூன்று மாதங்கள் ஜாக்கிசான் குழுவில் கராத்தே பயிற்சி எடுத்துக் கொண்டார் அமைரா. தன்னிடம் சிறந்த முறையில் பயிற்சி எடுத்துக் கொள்பவர்களுக்கு ஜாக்கிசான் விலை உயர்ந்த பொருளை பரிசளிப்பது வழக்கம். அந்த வகையில் தன் குழுவினருக்கான தானே வடிவமைத்த விலை உயர்ந்த குளிருக்கு அணியும் ஜாக்கெட் ஒன்றை பரிசளித்திருக்கிறார். அதனை பெரிய பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார் அமைரா.