ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வெள்ளக்காரதுரைக்கு பிறகு எழில் இயக்கும் படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன். அவரது உதவியாளர் ஜோதியின் கதையை இயக்குகிறார். விஷ்ணு ஹீரோவாக நடித்து, தயாரிக்கிறார். இவர்கள் தவிர சூரி, ரோபோ சங்கர், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார்கள். சத்யா இசை அமைக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தில் நிக்கி கல்ராணி போலீஸ் வேலைக்கு முயற்சி செய்யும் பெண்ணாக வருகிறார். இதனால் தினமும் உடற்பயிற்சி, வீரதீர விளையாட்டுகளைச் செய்வார். கராத்தேவும் கற்றுக் கொள்வார். அதனால் நிக்கி ஓடுகளை உடைக்கிற மாதிரி ஒரு காட்சி படமாக்கப்பட்டது. நிக்கியால் நிஜ ஓடுகளை உடைக்க முடியாது என்று படப்பிடிப்புக்காக டம்மி ஓடுகளை தயார் செய்து வைத்திருந்தார்கள்.
படப்பிடிப்புக்கு வந்த நிக்கி, ஓடு உடைக்கும் காட்சியில் நடித்தார். இருப்பது டம்மி ஓடு என்று தெரியாமல் முழு பலத்தையும் காட்டி நிஜமாகவே ஓட்டை உடைக்க தொட்டாலே உடையும் ஓடுகள் சிதறி ஓட... நிக்கியின் கை வேகமாக தரையில் இறங்கி கை மூட்டில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து படப்பிடிப்பை தொடர்ந்தனர்.
"சின்ன வயதில் நான் கராத்தே கிளாஸ் போயிருக்கேன். அதனால் ஓடு உடைக்கிறதை நான் பெருசா நினைக்கல. டம்மி ஓடு ரெடிபண்ணுங்கன்னு நானும் கேட்கவில்லை. டம்மி ஓடுதான் வச்சிருக்கோம்னு சொல்லவுமில்லை. ரியலாக இருக்க வேண்டும் என்பதற்காக ஓங்கி உடைத்தேன். அதனால் தடுமாறிவிட்டேன். சிறிய காயம் தான், ஆனால் காட்சி நன்றாக வந்திருந்தது. அந்த மகிழ்ச்சி, காயத்தின் வேதனையை மறக்கடித்து விட்டது" என்கிறார் நிக்கி.