ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
தெறி டீசர் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டது. அஜித் படங்களின் டீசர், டிரைலர்களைத்தான் இப்படி நள்ளிரவில் வெளியிட்டு வந்தார்கள். அதை அப்படியே விஜய் உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்களும் பின்பற்றுவது ஆச்சரியமான ஒன்றுதான். எதிர்பார்த்தது போலவே தெறி டீசர் ஒரு பக்கம் புதிய சாதனைகளைப் படைத்து வந்தாலும் மறுபக்கம் மீம் கிரியேட்டர்களை பலவிதமான கிண்டல், கேலி கலந்த மீம்ஸ்களை வெளியிட்டு தெறிக்க விட்டு வருகிறார்கள்.
அதிலும் விஜய் டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற ரைம்சைப் பாடியபடி அவர் டீசரில் வந்ததால் ஸ்கூல் ரைம்ஸுகளுக்கு நேற்று திடீரென மிகப் பெரிய மவுசு வந்துவிட்டது. திரைப்படங்கள், சீரியல்கள் ஆகியவற்றில் இடம் பெற்ற டிவிங்கிள் டிவிங்கிள் ரைம்ஸுகளைத் தேடிக் கண்டுபிடித்து தெறி டீசருடன் ஒப்பிட்டு ரணகளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜிகணேசன், இறந்து போன மகன் ஸ்ரீகாந்தை மடியில் கிடத்திக் கொண்டு அழுது கொண்டே பாடும் டிவிங்கிள் டிவிங்கிள் தான் நேற்றைய ஹைலைட்டாக இருந்தது.
அடுத்து, ஒரு தொலைக்காட்சித் தொடரில் ரேவதி சங்கரன் விதவிதமாகப் பாடிய டிவிங்கிள் டிவிங்கிள் ரைம்ஸ் பாடல் அடுத்த இடத்தைப் பிடித்தது. அது மட்டுமல்ல இன்னும் நூற்றுக்கணக்கான மீம்ஸ்கள் நேற்று சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருந்தன. சீக்கிரமாக இந்த ரைம்ஸ்களை யாராவது காப்பாற்றினால் நன்றாக இருக்கும்.