ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சில படங்களில் துக்கடா வேடங்களில் நடித்த சிருஷ்டி டாங்கே, மேகா படத்தில் முழு நாயகியாக நடித்தார். அதோடு தனது பளீர் சிரிப்பினால் இளவட்ட ரசிகர்களை சுண்டியிழுத்தார். அதனால் இந்த படத்திலிருந்து சிருஷ்டியின் கோலிவுட் டார்க்கெட் தொடங்கி விட்டது என்று ஆளாலுக்கு அவரை புக் பண்ணினார்கள். அதன்காரணமாக தற்போது அவரது கைநிறைய படங்கள் உள்ளன.
அதில் மா.கா.பா.ஆனந்துடன், சிருஷ்டி டாங்கே நடித்துள்ள நவரச திலகம் பிப்ரவரி 15-ல் திரைக்கு வருகிறது. இந்த படத்திலும் மேகா படத்தைப்போலவே ஒரு திருமண வீட்டில்தான் மா.கா.பாவை சந்திக்கிறாராம் சிருஷ்டி டாங்கே. பார்த்தகணமே அவர்களுக்கிடையே காதல் தீ பற்றிக்கொள்கிறதாம். ஆனால் முந்தைய படங்களில் தனது சிரிப்பை மட்டுமே வாரி வழங்கிய சிருஷ்டி, இந்த படத்தில் பர்பாமென்ஸையும் கூடுதலாக வெளிப்படுத்தியிருக்கிறாராம்.
குறிப்பாக, கவர்ச்சிக்கு தமன்னா, நடிப்புக்கு நயன்தாரா என்கிற பாணியில் அவர்கள் இருவரையும் கலந்துகட்டி நடித்திருக்கிறாராம். அந்த வகையில், நவரச திலகம் படத்தில் நடிப்பில் நவரசங்களையும் காண்பித்திருக்கிறாராம் சிருஷ்டி டான்கே.