ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்த 'ரஜினி முருகன்' படம் கடந்த 14ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்திற்கு தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளதோ அதே அளவிற்கு வெளிநாடுகளிலும் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 12 தினங்களில் இந்தப் படத்தின் வசூல் சுமார் 50 கோடி ரூபாயைத் தொட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வசூல் இந்த நிலையிலேயே போனால் 'வேதாளம்' படத்தின் வசூலைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.
அமெரிக்காவிலும் திரையிடப்பட்ட 'ரஜினி முருகன்' திரைப்படம் அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை 1 லட்சம் டாருக்கும் அதிகமாக அப்படம் வசூலித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து இதுவரை வெளிவந்துள்ள படங்களில் 'ரஜினி முருகன்' படம் அதிக வசூலை அள்ளி புதிய சாதனையைப் படைத்துள்ளது. பொங்கலுக்கு வெளிவந்த மற்ற படங்களுக்கு இல்லாத ஒரு வரவேற்பு இந்தப் படத்திற்கு இருந்ததாகச் சொல்கிறார்கள்.
அமெரிக்கா மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.