ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் யாழ். வினோத், டேனியேல் பாலாஜி, சசி, நீலிமா உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் இலங்கை போர்ச் சூழலில் நடந்த ஒரு உயிரோட்டமான காதலை மையப்படுத்தி உருவாகியிருக்கிறது. கோலிசோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்துள்ள எஸ்.என்.அருணகிரி இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிவாயநமஹ என்ற டைட்டீல் பாடலை பத்து லட்சம் ரூபாய் செலவு செய்து சிஜி மூலம் படமாக்கியிருக்கிறார்கள். மேலும், யு-டியூப்பில் அந்த பாடலை 3 லட்சத்துக்கும் மேலான ரசிகர்கள் லைக் செய்துள்ளார்கள். இதனால் சண்டிவீரனில் வெளியான அலுங்குற குலுங்குற பாடலுக்குப்பிறகு இந்த பாடல் இசையமைப்பாளர் அருணகிரிக்கு அடுத்து சூப்பர் ஹிட் பாடலாகியிருக்கிறது.
இந்த படம் குறித்து யாழ் இயக்குனர் ஆனந்த் கூறுகையில், இதற்கு முன்பு இலங்கையைச் சார்ந்த கதையில் எத்தனையோ படங்கள் வந்திருந்தபோதும், இந்த படம் புதுமையாக இருக்கும். முக்கியமாக, இலங்கை மண்ணில் உதித்த ஒரு உன்னதமான காதலைப்பற்றிய கதை. அதனால் தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு புதுமையான படமாக இருக்கும் என்கிறார்.