ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
திருடா திருடி படத்தில் அறிமுகமான சாயாசிங் அதன் பிறகு சில படங்களில் நடித்தார். பின்பு அனந்தபுரத்து வீடு படத்தில் தன்னுடன் நடித்த கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். பின்பு சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். பல வருட இடைவெளிக்கு பிறகு இது கதிர்வேலன் காதல் என்ற படத்தில் குணசித்திர நடிகையாக ரீ-என்ட்ரி ஆனார். அதன் பிறகு 'உயிரே உயிரே, உள்குத்து' படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
தற்போது 'பட்டினபாக்கம்' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்தில் கலையரசன் ஹீரோவாக நடிக்கிறார். அனுஷ்வரா குமார் என்ற புதுமுகம் ஹீரோயின். இவர்கள் தவிர சார்லி, மனோஜ் கே.ஜெயன், யோக் ஜேப்பி, ஜான் விஜய், மதுமிதா, எம்.எஸ்.பாஸ்கர். ரேகா சுரேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். இஷான் தேவ் இசை அமைக்கிறார், ராணா ஒளிப்பதிவு செய்கிறார்.
சென்னை பகுதியை டைட்டிலாக கொண்டு தற்போது பழைய வண்ணாரப்பேட்டை, சவுகார் பேட்டை, காசிமேடு, படங்கள் தயாராகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது பட்டினப்பாக்கம் என்ற பெயரில் இந்தப் படம் தயாராகிறது. இது காதல் மற்றும் ஆக்ஷன் த்ரில்லர் வகை கதை. ரோகித் ராய் மலைமோட்டில் தயாரிக்கிறார். படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா தயாரிப்பு அலுவலகத்தில் எளிமையாக நடந்தது.