ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நாசரின் இளைய மகன் லுத்புதீன் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் கொண்டவர். இதற்காக நடனம், சண்டை பயிற்சி, நடிப்பு பயிற்சிகளை முறையாக கற்றுள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கிய சைவம் படத்தில் முக்கிய கேரக்டரில் அறிமுகமானார், அதன் பிறகு இது என்ன மாயம் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்தார். தற்போது ஒரு புதிய படத்தில் சோலோ ஹீரோவாக நடிக்கிறார்.
கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தை இயக்கிய தனபால் பத்மநாபன் அடுத்து இயக்கும் படத்திற்கு, லுத்புதீன் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு ஜோடியாக அட்டக்கத்தி ஐஸ்வர்யா, சரபம் சலோனி லுத்ரா நடிக்கிறார்கள். இன்னொரு ஹீரோயினும் நடிக்க இருக்கிறார். கருணாகரன், சதீஷ் இருவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் சிங்கப்பூரில் நடக்கிறது. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.