மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
நடிகர் தனுஷ், சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதில் பல வெற்றி படங்களையும் கொடுத்திருக்கிறார், தோல்வி படங்களையும் கொடுத்திருக்கிறார். இந்த 13 ஆண்டுகளில் அவர் இரட்டை வேடங்களில் நடித்ததே இல்லை, ஆனால் இப்போது முதன்முறையாக தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார், அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷாவும், அஜித்தின் மச்சினிச்சியும், நடிகையுமான ஷாம்லி நடிக்க உள்ளார். இப்படத்தை 'எதிர்நீச்சல்', 'காக்கிச்சட்டை' படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்குகிறார்.
பேமிலி சென்ட்டிமென்ட் படமாக உருவாக உள்ள இப்படத்தில்,
தனுஷ், அண்ணன்-தம்பி என இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கிறார். அண்ணனுக்கு ஜோடியாக த்ரிஷாவும், தம்பிக்கு ஜோடியாக ஷாம்லியும் நடிக்கின்றனர். இதில் த்ரிஷா கிட்டத்தட்ட வில்லி ரோல் போன்று நடிக்கவுள்ளார்.
தனுஷே தயாரிக்கும் இப்படம் அடுத்தாண்டு துவங்கப்பட இருக்கிறது. தற்போது தனுஷ், தங்கமகன் மற்றும் பிரபு சாலமனின் படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்தப்படங்களை எல்லாம் முடித்த பின்னர் துரைசெந்தில் குமார் படத்தில் நடிக்கிறார்.