மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலையிலான அணியினர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். வேஷ்டி-சேலை-இனிப்பு என உள்ளூர், வெளியூர் உறுப்பினர்கள் அனைவருக்கும் நேரில் சென்று வழங்கி வருகின்றனர். இதற்காக பல டீம் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு ஊராக சென்று தீபாவளி பரிசு வழங்கி வருகிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு தங்கள் வீடு தேடியே தீபாவளி பரிசு வருவதைப்பார்த்து சிறிய நடிகர் நடிகைகள் சந்தோசத்துடன் அதை பெற்றுக்கொண்டு வருகின்றனர்.
மேலும், நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை பசி சத்யாவுக்கும் நேரில் சென்று தீபாவளி பரிசை வழங்கியுள்ளனர். இதற்காக, விஷால், பொன் வண்ணன் ஆகியோர் நேரில் சென்று தீபாவளி பரிசு வழங்கியதோடு, அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும் வாழ்த்தி விட்டு வந்துள்ளனர்.