தமிழ் ரசிகர்களை நம்பினேன் : 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா | 'விஜ்ஜ்ஜஜஜு…….' யார் தெரியுமா ? | மீண்டும் இணைந்த களவாணி கூட்டணி | லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் சூரி : இயக்குனர் யார்? | குபேரா படத்தின் 8 நாள் வசூல் என்ன | இலியானாவுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது | 35 லட்சம் பேக் : கயாடு பதில் சொல்வாரா | விஷ்ணு விஷால் குடும்ப கதையை சினிமாவாக எடுக்கலாம் போல | விஜய்சேதுபதி மகன் படவிழாவில் விஜய்யின் ஜனநாயகன் இயக்குனர் | ராஷ்மிகாவின் 'ரெயின்போ' படம் என்ன ஆயிற்று ? |
சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா படங்களில் ஹீரோவின் நண்பராக நடித்த சவுந்தரராஜா, கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும், ''எனக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை'' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக மெட்ராஸ் படத்தில் நடித்த, தற்போது கபாலியில் நடித்துக் கொண்டிருக்கும் ரித்விகா நடிக்கிறார். ''ஒரு கனவு போல'' என்ற படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்து வருகிறார். இதுதவிர அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
"மெல்ல மெல்ல வளர்ந்து வரும் நடிகர்களில் நானும் ஒருவன். பெரிய சினிமா பின்னணி எதுவும் கிடையாது. அதனால் எனது ஸ்டெப்களை கவனமாக எடுத்து வைக்கிறேன். எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது படத்தில் கவுண்டமணி சாருடன் நான் நடிப்பது என் பாக்கியம். அவரிடமிருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன், நிறைய காட்சிகளில் அவருடன் இணைந்து நடிக்க முடியாமல் திணறியபோது கொஞ்சம் கோபப்பட்டாலும் தட்டிக்கொடுத்து பாராட்டி நடிக்க வைத்தார். இப்போது விஜய் சார் படம் வரைக்கும் வளர்ந்திருக்கிறேன்" என்கிறார் சவுந்தரராஜா.