ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை தொடர்ந்து 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக வரவிருக்கிற படம் 'டார்லிங்-2'. 'மெட்ராஸ்' பட புகழ் கலையரசன் கதாநாயகனாக நடித்த படம் ஜின். காளி வெங்கட், அர்ஜுனன், 'மெட்ராஸ்' படத்தில் நடித்த இன்னொரு நடிகரான ஹரி ஆகியோர் நடிக்க, சதீஷ் சந்திரசேகரன் இயக்கியுள்ள ஜின் படமே 'டார்லிங்-2' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
டார்லிங் படத்தைத் தயாரித்த 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் ஜின் படத்தை வாங்கிய பிறகு, டார்லிங்-2 என பெயர் மாற்றம் செய்தது. இப்படத்தை இம்மாதம் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவித்திருந்தார்கள். லேட்டஸ்ட் தகவலின்படி, டார்லிங்-2 படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்? இப்படத்தின் ஒரு சில தொழில்நுட்பப்பணிகள் பாக்கி இருப்பதாகவும், எனவேதான் ரிலீஸ் தேதியில் மாற்றம் என்று 'டார்லிங்-2' படக்குழுவினர் சொல்கின்றனர். உண்மை வேறு... அக்டோபர் 21 அன்று நானும் ரௌடிதான், 10 எண்றதுக்குள்ள, வாலிபராஜா, மற்றும் ரஜினிமுருகன் என பெரிய படங்கள் வெளியாகின்றன.
அதனாலேயே 'டார்லிங்-2' ஒருவாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் அடிபடுகிறது.