விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
விஜய் படங்களைப் பொறுத்தவரை குறித்த நாளில் ட்ரெய்லர், ஆடியோ மட்டுமின்றி படத்தையும் ரிலீஸ் செய்து விடுவார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வருகிறார் விஜய். ஆனபோதும், அவர் நடித்து வெளியாகியுள்ள புலி படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிந்து விட்டபோதும் கிராபிக்ஸ் வேலைகள் காரணமாக செப்டம்பரில் வெளியாக இருந்த படத்தை அக்டோபர் 1-ந்தேதி வெளியிட்டனர். இந்த நிலையில் தற்போது வீரம் சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வேதாளம் படத்தை தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக ஏற்கனவே அறிவித்து விட்டனர். அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் தீபாவளி ரிலீஸ் என்றே உறுதிபடுத்தியிருந்தனர். ஆனபோதும், இன்னும் வேதாளம் படத்தில் அஜீத்-ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட ஒரு டூயட் பாடல் படமாக்கப்படவில்லையாம். அதேபோல், எடிட்டிங் செய்த பிறகு திருப்தி இல்லாத சில காட்சிகளை ரீ-ஷூட் பண்ணவும் முடிவெடுத்திருக்கிறாராம் டைரக்டர் சிவா.
மேலும், தீபாவளி நெருங்கிக் கொண்டிருப்பதால் தற்போது இறுதிகட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையே அஜீத்-ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க ஸ்ருதியின் கால்சீட்டுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் பல மொழிகளிலும் பரவலாக நடித்து வரும் அவர், இன்னும் கால்சீட் கருணை காட்டவில்லையாம். அதனால் அவரது வரவுக்காக வேதாளம் டீம் வழி மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறதாம். மேலும், ஒருவேளை அவரது கால்சீட் தாமதமாக கிடைத்தால் வேதாளம் தீபாவளி ரிலீஸ் என்பதில் மாற்றம் வர வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள்.