ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ் சினிமாவில் பொம்பள பேய்களே ஆதிக்கம் செய்து வந்த நிலை மாறி காஞ்சனாவிற்கு பிறகு ஆண் பேய்களும் ஆதிக்கம் செய்யத் தொடங்கியுள்ளன. அதன்பிறகு கமரக்கட்டு என்ற படத்தில் காதலிகளால் கொலை செய்யப்பட்ட இரண்டு ஆண்கள், பேயாக வந்து அவர்களை பழி வாங்கினர். அதேபோல் காஞ்சனா-2விலும் மீண்டும் பேயாக நடித்தார் லாரன்ஸ், அதையடுத்து இப்போது ஸ்ரீகாந்த் செளகார் பேட்டை படத்தில் பேய் வேடத்தில் நடித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து மேலும் சில ஹீரோக்களும் பேய் வேடங்களில் நடித்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், காமெடியன் மயில்சாமியும், பாண்டியோட அலம்பல் தாங்கல என்றொரு படத்தில் பேய் வேடத்தில் நடித்துள்ளார். ஆனால் மற்ற படங்களில் எல்லாம் ஆண் பேய்கள் ஆவேசமாக நடித்திருந்த நிலையில், இந்த படத்தில் மயில்சாமி காமெடி செய்யும் பேயாக நடித்துள்ளாராம். ஏற்கனவே சில காமெடி பேய் படங்கள் வந்திருந்தபோதும், இந்த படத்தில் மயில்சாமி செய்கிற காமெடி அட்டகாசம் வெடிச்சிரிப்புகளை வரவைக்கும் என்கிறார்கள். அதோடு இப் படத்தில் மயில்சாமிக்கு ஜோடியாக ஒரு புதுமுக நடிகையும் பேயாக நடித்துள்ளாராம்.