ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 18ந் தேதி தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. சரத்குமார், விஷால் இரு அணியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இரு அணியினரும் கமல், ரஜினி ஆதரவை பெறுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். ரஜினிக்கும், கமலுக்கும் தலா ஒரு ஓட்டுதான் இருக்கிறது. ஆனாலும் ரஜினி, கமல் ஆதரவளிக்கும் அணியின் பக்கம்தான் நியாயம் இருக்கும் என்று கருதி மற்றவர்கள் வாக்களிக்க வாய்ப்பிருப்பதால் அவர்கள் ஆதரவை பெற இரு அணியினரும் முயற்சித்து வருகிறார்கள்.
ரஜினி
ரஜினியை சரத்குமார் அணியினரும், விஷால் அணியினரும் மாறி மாறி சந்தித்து உள்ளனர். அவரும் வந்தவர்களை வரவேற்று உபசரித்து வெற்றிக்கு வாழ்த்து சொல்லி அனுப்பி இருக்கிறார். அது வழக்கமான ஒரு நாகரீகமான மரபு. அதனையே இரு அணியினரும் தங்கள் அணிக்கான ஆதரவாக சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். நேற்று தலைவர் பதவிக்கு வேட்பு மனுதாக்கல் செய்த பிறகு மீடியாவிடம் பேசிய சரத்குமார் "ரஜினியை நாங்கள் சந்தித்தோம். அவர் நாங்கள் வெற்றி பெற வாழ்த்தினார். வாழ்த்தினாலே ஆதரவளிப்பதாகத்தானே பொருள்" என்றார்.
கமல்
அதேபோல இரு அணியினரும் கமலஹாசனை சந்தித்து குரூப் போட்டோ எடுத்து மீடியாக்களுக்கு கொடுத்தார்கள். கமல் ஆதரவு எங்களுக்குதான் என்று கூறி வந்தார்கள். இந்த நி¬யில் நேற்று ஏவிஎம் ஸ்டூடியோவில் படப்பிடிப்பில் இருந்த கமலை விஷால் அணியினர் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்புக்கு பிறகு விஷால் அணிக்கு தனது ஆதரவை கமல் வெளிப்படையாக அறிவித்தார். அதற்கு ஆதாரமா நாசரை தலைவர் பதவிக்கு முன்மொழிந்து வேட்மனுவில் கையெழுத்திட்டார்.
ரஜினி பங்கேற்பாரா.?
இந்த நிலையில் விஷால் அணியினரின் தேர்தல் ஆலோசனை கூட்டம் இன்று ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடக்கிறது. ரஜினி வெளிப்படையாக ஆதரவை சொல்லாவிட்டாலும் அவர் ஆதரவு எங்களுக்குதான் என்று காட்டிக் கொள்ளவே ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்துவதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் கமல், ரஜினி இருவரும் கலந்து கொண்டு விஷால் அணிக்கு தங்கள் ஆதரவை அளிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் காட்சிகள் அரசியல் கட்சிகளின் பொது தேர்தலை விட பரபரப்பு நிறைந்ததாக மாறி வருகிறது.