ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நாளை (அக்டோபர் 2) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும், காந்தி சர்வசமைய பிரார்த்தனை மையமும் இணைந்து ஹாலிவுட் இயக்குனர் ரிச்சர்ட், அட்டன்பரோ இயக்கி, கிங்ஸ்லி நடித்து, பல ஆஸ்கர் விருதுகளை வென்ற புகழ்பெற்ற காந்தி படத்தை சென்னை திரையரங்குகளில் திரையிடுகிறார்கள். இதனை பொதுமக்ககள் இலவசமாக பார்க்கலாம். காந்தி திரைப்படத்துடன் அவரைப் பற்றிய ஆவணத் திரைப்படம் ஒன்றும் திரையிடப்படுகிறது. இந்த இரண்டுமே தமிழில் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்க அம்சம்.
நாளை காலை அன்னை அபிராமி தியேட்டரில் காலை 8.30 மணிக்கும், சத்யம் தியேட்டரில் உள்ள ஸ்டூடியோ 5, சாய்சாந்தி, பெரம்பூர் எஸ் ஆகிய தியேட்டர்களில் காலை 9 மணிக்கும் திரையிடப்படுகிறது. சென்னையைத் தொடர்ந்து பல ஊர்களிலும் காந்தி படத்தை இலவசமாக திரையிட இருக்கிறார்கள். காந்தி படம் பார்க்க விரும்புகிறவர்கள், அல்லது இது தொடர்பாக மேலும் தகவல்களை பெற விரும்புகிறவர்கள் 9790842245, 9790906735 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.