ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இந்த ஆண்டு இதுவரை வெளியான 103 படங்களில் 9 படங்கள் மட்டுமே லாபம் சம்பாதித்துக்கொடுத்துள்ளன என்று தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பிட்டிருப்பதாவது- இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் முதல் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஆதரவு பெற்று இதுவரை 103 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் பெரிய பட்ஜெட் படங்கள் 23, மீடியம் மற்றும் சிறிய பட்ஜெட் படங்கள் 80. ஆக இந்த 103 படங்களுக்காக தயாரிப்பாளர்கள் செலவு செய்துள்ள மொத்த தொகை ரூ. 750 கோடியாகும்.
மேலும், சினிமாவை நம்பி 750 கோடி செலவு செய்த தயாரிப்பாளர்களில் பெருவாரியானவர்கள் 90 சதவிகிதத்தினர் நஷ்டத்தையே சந்தித்துள்ளனர். அதோடு இந்த 103 படங்களில் 20 பெரிய பட்ஜெட் படங்களும், 4 சிறிய பட்ஜெட் படங்களும் மட்டுமே சேட்டிலைட்டுக்கு விற்பனையாகியுள்ளது. மற்றபடி எந்த படங்களையும் சேனல்கள் வாங்காமல் தேங்கிக்கிடக்கின்றன.
முக்கியமாக, கடந்த 10 மாதங்களில் வெளியான 103 படங்களில் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுத்த படங்கள் என்றால் வெறும் 9 படங்கள் மட்டுமே. விநியோகஸ்தர்களுக்கும் இந்த படங்கள்தான் லாபமாக அமைந்தன. மற்ற படங்கள் அனைத்துமே தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் என அனைருக்குமே பெருத்த நஷ்டத்தையே கொடுத்துள்ளன என்று தயாரிப்பாளர் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
இந்த விவரங்களை கேட்டறியும் புதிய தயாரிப்பாளர்களும், படம் தயாரித்துக்கொண்டிருப்பவர்களும் அடுத்தபடியாக படம் தயாரிப்பதற்கே அச்சமடைந்துள்ளனர்.