ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மிர்ச்சி சிவா, பாபி சிம்ஹா, லட்சுமி தேவி நடிக்கும் படம் மசாலா படம். லக்ஷ்மண் குமார் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். கார்த்திக் ஆச்சார்யா இசை அமைக்கிறார். விஜய ராகவேந்திராவுடன் இணைந்து லக்ஷ்மண் குமாரே தயாரிக்கிறார். சினிமாவில் சாதிக்க போராடும் இரண்டு இளைஞர்களின் கதை.
தற்போது இந்தப் படத்தின் சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டுள்ளது. எவில்யூஷன் ஆஃப் சினிமா என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த பாடல் சினிமா வரலாற்றை பாடுகிறது. தாமஸ் ஆல்வா எடிசன் பல்பு கண்டு பிடித்ததில் தொடங்கி லூமியஸ் பிரதர்ஸ் கலைடாஸ் கோப்பை கேமராவாக்கி ஓடும் ரெயிலை படம் பிடித்த முதல் சினிமாவிலிருந்து ஆரம்பிக்கிறது பாடல்.
உலக அரங்கிலிருந்து சினிமா இந்தியாவுக்குள் வந்தது எப்படி, ஊமை படமாக இருந்து பேசும் படமாக மாறியது. எப்படி முதலில் கட்டப்பட்ட தியேட்டர் எது என பல விஷயங்களை தொட்டுச் சென்று தியாகராஜ பாகவதர் முதல் ரஜினி கமல், விஜய் அஜீத் வரை வந்து நிற்கிறது பாடல். 4 நிமிட பாடலில் சினிமாவின் சரித்திரத்திதை ரத்தின சுருக்கமாக சொல்கிறார்கள். கார்டூன் அனிமேஷன் காட்சிகள், பழைய படங்களின் காட்சிகள், விளம்பர போஸ்டர்கள், சினிமா பாட்டு புத்தகங்கள் என நிறைய உழைத்து பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இந்த பாடல்.