ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஹிந்தித் திரையுலகத்தைப் போல் தமிழ்த் திரையுலகத்திலும் சமீப காலமாக 'பார்ட்டி' கலாச்சாராம் பெருகிவிட்டது. ஒரு பக்கம் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் புகைபிடிக்கும் காட்சிகளிலும், குடிக்கும் காட்சிகளிலும் நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. மறுபக்கம் படம் வெளியானால் பார்ட்டி, ஒரு நாள் ஓடினால் பார்ட்டி, இரண்டு நாள் ஓடினால் சக்சஸ் பார்ட்டி, பிறந்த நாள் என்றால் பார்ட்டி என பார்ட்டிகளாக வைத்துக் குடியும், கும்மாளமுமாக இருப்பார்கள். சமீபத்தில் அப்துல்கலாம் இறந்த அன்று கூட தனுஷ் அவருடைய பிறந்த நாளுக்கு பார்ட்டி வைத்து குடித்துக் கொண்டாடடியதை பலரும் கடுமையாக கண்டித்தனர்.