ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இன்ஃபிலிம் ஆட் என்று சொல்லப்படும் சினிமாவில் இடம்பெறும் விளம்பரங்கள் வாங்கிக் கொடுப்பவராக சினிமாத்துறைக்குள் வந்தவர் கணேஷ்.
கௌதம் மேனனின் நட்பைப் பெற்ற கணேஷை, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு வேடத்தில் நடிக்க வைத்தார் கௌதம் மேனன்.
அப்படத்துக்குப் பிறகு விடிவி கணேஷ் என்ற பெயரில் காமெடி வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவருடைய கரகர குரல் தனி அடையாளமாகிப்போனது மட்டுமல்ல அதுவே மக்களை சிரிக்கவும் வைத்தது. அதனால் தவிர்க்க முடியாமல் காமெடி நடிகரானார் கணேஷ்.
மற்றவர்கள் இவரை நடிக்க அழைப்பதில்லை என்றாலும் சிம்பு மட்டும் நட்பு அடிப்படையில் கணேஷுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறார். சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாலு படத்திலும் நடித்திருக்கிறார் கணேஷ். இவரை காமெடியன் வேடத்தில் நடிக்க வைக்க ஒரு தயாரிப்பாளர் சமீபத்தில் அணுகினார். 25 லட்சம் சம்பளம் கொடுங்கள் என்று கூலாக கேட்டிருக்ிறார் கணேஷ். என்னது 25 லட்சமா? என்று அதிர்ச்சியடைந்த அந்த தயாரிப்பாளர் ஹார்ட்அட்டாக் வருவதற்கு முன் அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டாராம்.