ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
டோலிவுட்டில் திறமையான நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட என்.டி.ஆர் குடும்ப வாரிசான கல்யாண் ராம் இந்த வருடத்தை தனது பட்டாஸ் படத்தின் வெற்றியுடன் துவங்கினார். கல்யாண் ராம் நாயகனாக நடித்த பட்டாஸ் படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதுடன் வசூலிலும் நல்ல லாபத்தைக் கொடுத்தது. இப்படத்தை தொடர்ந்து தனது என்.டி.ஆர் ஆர்ட்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் கிக் 2 படத்தை தயாரித்த கல்யாண் ராமிற்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. நடிகர் ரவி தேஜா மற்றும் இயக்குநர் சுரேந்தர் ரெட்டி கூட்டணியின் வெளிவந்த கிக் 2 படம் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி பெறவில்லை. இதனால் வருத்தமடைந்த கல்யாண் ராம் அடுத்து தான் நடித்து வரும் ஷேர் படத்தை அதிகமாக நம்பியுள்ளார். இயக்குநர் மல்லிகார்ஜுனா இயக்கும் இப்படத்தில் நடிகை சோனல் சவுகான் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இம்மாத இறுதியில் திரைக்கு வரும் என கூறப்பட்ட இப்படத்தின் திரையிடும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.