ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நகைச்சுவை நடிகர் குமரிமுத்து தன் மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர். நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்து கொடுக்கப்பட்டதை ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வந்தார். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரையும், செயலாளர் ராதாரவியையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இதனால் சங்கத்தின் விதிமுறைகளை மீறிவிட்டதாக கூறி குமரிமுத்துவை நடிகர் சஙகத்திலிருந்து நீக்கினார்கள். இதை எதிர்த்து குமரி முத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் குமரிமுத்துவுக்கு சாதகமாக இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டது. குமரிமுத்துவை சங்கத்திலிருந்து நீக்கியது செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது.