மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட் திரையுலகில் லக் படத்தில் இருந்து தனது கதாநாயகி பிரவேசத்தை தொடங்கிய ஸ்ருதிஹாசன், பின்னர் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தபோதும் இப்போதுவரை இந்திக்கு கூடுதல் முக்கியத்துவமே கொடுத்து வருகிறார். அதோடு, மார்க்கெட்டில் பிரபலமாக இருக்கும் நடிகைகளையே அதிர வைக்கும் உடையணிந்து நடித்து அவ்வப்போது பெண்கள் அமைப்புகளின் எதிர்ப்புக்கும் ஆளாகி வருகிறார்.
ஆனால், அவருக்கு எந்த அளவுக்கு எதிர்ப்புகள் எழுகிறதோ அதற்கும் பன்மடங்கு மேல் இந்திய அளவில் ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறார்கள். குறிப்பாக, ஸ்ருதிஹாசன் நடித்து வெளியாகும் ஒவ்வொரு படங்களின் புகைப்படங்களும் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்து வருகிறதாம். அந்த வகையில், சமீபத்தில் மகேஷ்பாபுவுடன் அவர் நடித்து வெளியான ஸ்ரீமந்துடு படம் சூப்பர் ஹிட்டாகியிருப்பதால் சமீபகாலமாக தெலுங்கில் மந்தமாகியிருந்த ஸ்ருதியின் மார்க்கெட் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது.