ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சிறு சிறு வில்லன் வேடங்களில் நடித்து வந்த ஆர்கே., ''எல்லாம் அவன் செயல்'' படத்தின் மூலம் ஹீரோவானார். அதன் பிறகு மஞ்சள் வெயில், அழகர்மலை, புலிவேஷம், என் வழி தனி வழி படங்களில் ஹீரோவாக நடித்தார். எல்லாம் அவன் செயல் தவிர மற்ற எந்த படமும் ஹிட்டாகவில்லை. அதனால் இடையிடையே பெரிய இயக்குனர்களின் படங்களில் வில்லனாக நடித்து வந்தார். பாலாவின் அவன் இவன், விஜய் நடித்த ஜில்லா, ஆகிய படங்கள் முக்கியமானவை, தற்போது அவர் வைகை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வந்தாலும், விஷால் நடித்துள்ள ''பாயும் புலி'' படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
போலீஸ் அதிகாரியான விஷாலின் கண்ணில் விரல்விட்டு ஆட்டும் அரசியல்வாதி வேடம் அவருக்கு. இந்தப் படம் ஆர்கேவிற்கு இன்னொரு இமேஜை உருவாக்கிக் கொடுக்கும் என்கிறார்கள் பாயும்புலி பட யூனிட்டார். சொந்த தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் ஆர்கே. மற்றவர்கள் படத்தில் வில்லனாக நடிக்கிறார். சினிமாவில் தன்னை தொடர்ந்து தக்க வைத்துகொள்ள இந்த இரட்டை குதிரை சவாரியை செய்து வருகிறார்.